Skip to main content

கொரோனா வைரஸ்
Coronavirus update: Odisha asks 82,248 people to remain in self-quarantine
          சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற்கப்படும் இடத்தில் இந்தப்ஹைசிக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரி டப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று வதாக சீன நாட்டின் தேசிய சுகாதரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதாரா நிறுவனமும் இவை மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.
        கடந்த நான்கு மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,96,139 இலட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த (3,76,200-Recovered) தொற்றுக்கு இதுவரை 1,02,669 (Deaths) ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு விலங்குகளுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றை குணப்படுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் எச்சரிக்கையும் சுகாதாரமும் மட்டும் தான் இப்போதைக்கு நம்மை காப்பாற்றும்.

Comments